விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை..!

0 2493

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் அவைகளின் விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

களமருதூர், ஆத்தூர், கனையார், பிள்ளையார்குப்பம், செம்பியன்மாதேவி உட்பட பல்வேறு கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சிலை செய்வதற்கான உற்பத்தி பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்ததால் போதிய வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் இதனால் வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments