போதையில் அட்டகாசம்.. சரக்கு ஜெயபாலை கல்லால் சாய்த்தனர்..!

0 4230

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போதையில் அரிவாள் எடுத்து வெட்ட வந்தவரை, எதிர் தரப்பினர் கல்வீசி தாக்கி விரட்டிச்சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. 

திருச்சி திருவெறும்பூர் அடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபால்.மனைவி இறந்த நிலையில் இவருக்கு பிரதாப் என்கிற ஆறு வயது மகன் உள்ளார்.
கட்டிட வேலைக்கு சென்று வந்த ஜெயபால் மது போதைக்கு அடிமையானதால் அந்தப்பகுதியில் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக்கி வந்துள்ளார்.

இதனால் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் ஜெயபாலுக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ஜெயபால்
வழக்கம் போல் மது போதையில் தனது வீட்டருகே நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியே வந்த சுந்தர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும், ஜெயபாலை சத்தம் போட்டு தட்டி கேட்டுள்ளனர். அடங்கமறுத்த ஜெயபால் தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை வெட்ட முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜெயபாலை ஓட ஓட விரட்டி சென்று இடுப்பு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியதுடன் அவரது நெஞ்சில் பெரிய கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர். இந்த கொலைச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவானது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருவரம்பூர் போலீசார் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் லிலி  வரவழைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து 4 பேர் கொண்ட கும்பலால் கொத்தனார் துரத்தி துரத்தி கொலை செய்யப்பட்டதை கண்டறிந்த போலீசார் அதில் இருவரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments