எரிபொருள் காலியாகி கீழே விழுந்து நொறுங்கிய விமானம்..!

0 2710

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடுவானில் பறந்த சிறியரக விமானமொன்று எரிபொருள் தீர்ந்து வீட்டின் மேற்கூரையின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

ஆர்லாண்டோ நகர் பகுதியில் பறந்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் எரிபொருள் தீர்ந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. விமானி, அந்த விமானத்தை அவசரமாக சாலையில் தரையிறக்க முயற்சித்துள்ளார்.

அதற்குள்ளாக அந்த விமானம் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி சிறிய காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments