பாலியல் புகாரில் தந்தையை கைது செய்த போலீசார்.. விசாரணைக்கு அழைத்ததால் தூக்கில் தொங்கிய மகன்.!

0 2408
பாலியல் புகாரில் தந்தையை கைது செய்த போலீசார்.. விசாரணைக்கு அழைத்ததால் தூக்கில் தொங்கிய மகன்.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பாலியல் புகாரில் 65 வயது நபரை கைது செய்த போலீசார் அவரது மகனையும் விசாரணைக்கு அழைத்துச்சென்ற நிலையில், சில மணிநேரம் கழித்து அவரது மகன் வயல்வெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

65 வயதான சம்பத் என்பவர், கீழ்செவளம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளிக்கப்பட்டது. அதிகாலை 4 மணியளவில், சம்பத்தை கைது செய்த மகளிர் போலீசார், வீட்டில் இருந்த அவரது 36 வயது மகன் வெங்கடேசனையும் விசாரணைக்காக போலீஸ் ஜீப்பில் அடித்து ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சில மணி நேரத்திற்கு பின் வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயலில் வெங்கடேசன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் உறவினர்கள் கேட்டபோது வெங்கடேசன் பாதி வழியிலேயே போலீஸ் ஜீப்பில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டதாக கூறியுள்ளனர்.

2 குழந்தைகளுக்குத் தந்தையான வெங்கடேசனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி உடலை பெற மறுத்த உறவினர்கள் மாவட்ட எஸ்.பி விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments