2 சின்ன பசங்க செஞ்ச வேலையை பார்த்தீங்களா..? பேருந்து நிலைய திகில்

0 5328

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வைத்து 2 சிறுவர்கள் உள்ளிட்ச 5 பேர் கொண்ட கூலிப்படை இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த சரவணகுமார் இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் தனது தம்பி முகேஷ் கண்ணன், உறவினர் சிவா ஆகியோரை சனிக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற்றி விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

பேருந்து நிலையம் அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட கூலிப்படை கும்பல் சரவணகுமாரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரவணகுமார் பலியான நிலையில், இதைப் பார்த்த அவரது தம்பி மற்றும் உறவிக்காரர் அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அந்தப்பகுதியில் சம்பவத்தை நேரில் பார்த்தவர் எடுத்த வீடியோ காட்சிகளை கொண்டு சரவணகுமாரை கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பிய கும்பலை அடையாளம் கண்டுபிடித்தனர் போலீசார்.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனோ, துரைசாமி, கார்த்திக் மற்றும் இரண்டு இளஞ்சிறார்கள் ஆகிய ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .

இந்த விசாரணையில் மனோ வுக்கும் சரவணக்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் ,சரவணக்குமார் தன்னை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்ததை அறிந்து , தன்னை கொன்று விடுவானோ என்ற அச்சத்தில், முந்திக் கொண்டு தாங்கள் தாக்குதல் நடத்தியதாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments