மருத்துவரை தாக்கிய தனது மகளின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட மிசோர மாநில முதலமைச்சர்.!

0 2562

மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில், தோல் மருத்துவரை தாக்கிய தனது மகளின் செயலுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா (Zoramthanga) மன்னிப்பு கோரினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சரின் மகள், தோல் மருத்துவரை சந்திக்க முயன்றதாகவும், ஆனால் அவரை சந்திக்க மறுத்த மருத்துவர், முன் அனுமதி பெற்று வருமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மருத்துவரை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தனது மகளின் செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments