ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரான அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் உயிரிழப்பு

0 2637

ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரான அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டார்.

உக்ரைன் படையெடுப்பில் புடினின் மூளையாக செயல்பட்டவர் அலெக்சாண்டர் டக்கின் (Alexander Dugin).

பத்ரிக்கையாளராவும், அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிவந்த அவரது மகள் டார்யா டகினா (Darya Dugina), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது காரில் செல்லாமல் தந்தையின் Toyota Land Cruiser காரில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அந்த காரில் முன்கூட்டிய பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments