சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது.. ரூ.11.64 லட்சம் பணம், தங்க மோதிரங்கள், கார்கள் பறிமுதல்..!

0 2308
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது.. ரூ.11.64 லட்சம் பணம், தங்க மோதிரங்கள், கார்கள் பறிமுதல்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம், தங்க மோதிரங்கள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

மூட்டாம்பாளையத்தில் விவசாய தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கிருந்த 18 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

போலீசார் வருவதை அறிந்து தப்பியோடிய தோட்டத்து உரிமையாளர் கௌஷிக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments