தோட்டத்தில் உறங்கிய முதியவரை தாக்கி, கட்டிபோட்டுவிட்டு மாடுகளை திருடிச்சென்ற 4 பேர் கைது.!

0 3160

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் முதியவரை தாக்கி, 4 நாட்டு காளை மாடுகளை திருடிச்சென்று விற்பனை செய்ய முயன்ற உணவக முதலாளி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் பகுதியில் விவசாயம் செய்து வரும் அத்தப்பகவுண்டர் என்பவர், நேற்று இரவு தனது தோட்டத்தில் உறங்கிய போது, அவரை கட்டிபோட்டு 4 மாடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

காரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சனி சந்தையில், மாடுகளை விற்பனை செய்ய இருந்த திருடர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், முதியவர் தோட்டத்திற்கு அருகில் உணவகம் நடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ், அவரது தொழிலாளர்களுடன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments