பரந்தூரில் விமான நிலையம் - சுற்று வட்டார கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தியும், ஒப்பாரி வைத்தும் போராட்டம்..!

0 2269
பரந்தூரில் விமான நிலையம் - சுற்று வட்டார கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தியும், ஒப்பாரி வைத்தும் போராட்டம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டார கிராம மக்கள் கருப்புக்கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளன.

தகவலறிந்து வந்த போலீசார், நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக நாளை நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் குறைகளை தெரிவிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments