டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்..!

0 2245
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்..!

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மதுபானக் கடை உரிமம் வழங்கிய முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, நேற்று முன்தினம் சிசோடியாவின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 31 இடங்களில் சோதனை நடத்தி முக்கியமான இமெயில்கள், கணினி ஆவணங்களைக் கைப்பற்றின.

இந்த வழக்கில் சிசோடியா விசாரணைக்கு அழைக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் உள்பட 13 பேர் வெளிநாட்டுக்கு தப்ப முடியாத வகையில் விமான நிலையங்களுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே, சிபிஐ சோதனைகளில் எதுவும் கிடைக்காத நிலையில், தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? என கேள்வி எழுப்பிய சிசோடியா, டெல்லியில் தான் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் டிவிட்டரில் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments