சீனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ

சீனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவின் மேலாதிக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள உலகில் உள்ள ஜனநாயக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
சீனாவின் நடவடிக்கைகள் தைவான் அல்லது தென் சீனக் கடற்பகுதியில் இருப்பது மட்டும் அல்லாமல், சாலமன் தீவுகளில் சீனாவைக் குறித்து ஆஸ்திரேலியா கவலை கொண்டுள்ளதாகவும் ஜோசப் வூ தெரிவித்தார்.
Comments