அவசர ஆயுத கொள்முதல்.. அதிகாரமளிக்க நடவடிக்கை

0 2854
இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவைப்படும் முக்கிய ஆயுதங்கள், கருவிகளை உடனடியாக வாங்கும் வகையில், அவசர கொள்முதல் அதிகாரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவைப்படும் முக்கிய ஆயுதங்கள், கருவிகளை உடனடியாக வாங்கும் வகையில், அவசர கொள்முதல் அதிகாரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளது. 

பதற்றமான சூழலின்போது பாதுகாப்பு படைகளின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதங்கள், கருவிகளை உடனடியாக வாங்க அவசர கொள்முதல் அதிகாரம் அவசியமாகிறது. டெல்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட கூட்டத்தில், இது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மோதலுக்கான சூழல் நிலவும் சமயத்தில், துரிதமாக புதிய அல்லது ஏற்கனவே உள்ள ஆயுதங்களை கூடுதலாக வாங்க, பாதுகாப்பு படைகளுக்கு அவசர கொள்முதல் அதிகாரம் அனுமதியளிக்கும். இது போன்ற கொள்முதலுக்கு பாதுகாப்புப் படை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடும் என்றும், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற தேவையில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தைவான் - சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு முக்கிய ஆயுதங்களை உடனடியாக வாங்கும் வகையில் அவசர கொள்முதல் அதிகாரம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, இதேபோல் தயார் நிலையை மேம்படுத்தும் வகையில், இந்திய விமானப் படையும், ராணுவமும் ஹெரான் எனப்படும் ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை கொள்முதல் செய்தது. லடாக் எல்லைப் பகுதியில் சீனா ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் அந்த கண்காணிப்பு விமானங்கள் வாங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments