'அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை' - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2572
அங்கீகாரமின்றியும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதலின்றியும் செயல்படும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கீகாரமின்றியும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதலின்றியும் செயல்படும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அரிசிபாளையத்தில் உள்ள சாய் விஹார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அங்கீகாரமின்றி செயல்பட்டதாக கூறி அதனை மூட உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், சேலத்தில் பல பள்ளிகள், அங்கீகாரமின்றியும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதலின்றியும் இயங்குவதாகவும், 2011 முதல் அங்கீகாரம் பெற முயற்சித்தும் வழங்கப்படவில்லை என்றும் அப்பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments