திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காருக்குள் வைத்து காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது..!

0 5377
திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காருக்குள் வைத்து காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது..!

திருவாரூர் அருகே திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த மதியரசனும், நீடாமங்கலத்தைச் சேர்ந்த பெண்ணும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இருவருக்குமே அவரவர் பெற்றோர் வேறு இடத்தில் வரன் பார்த்து திருமணம் நிச்சயித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காதலியை வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்ற மதியரசன், இரவு காரில் வீடு திரும்பும் போது இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

இதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மதியரசன் காருக்குள் வைத்து கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்ததாக சொல்லப்படுகிறது.

படுகாயமடைந்த காதலியை மதியரசனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்த நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் மதியரசனை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments