செல்போன் சார்ஜர் வெடித்ததால் உறங்கும் போதே தீயில் கருகி உயிரை விட்ட நபர்..

0 3759
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மின்கசிவால் செல்போன் சார்ஜர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மின்கசிவால் செல்போன் சார்ஜர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.

கூலைமூப்பனூரைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர், தென்னை ஓலையால் ஏற்படுத்தப்பட்ட வீட்டில் இரவு உறங்கும்போது செல்போனை சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்றும் அதேபோல் செல்போனை சார்ஜ் போட்டு உறங்கியபோது, நள்ளிரவில் மின்கசிவால் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி அர்ஜுன் சிக்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் மற்றொரு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அர்ஜுனின் மனைவி மற்றும் அருகிலிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில், கொளுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கி அர்ஜுன் உயிரிழந்ததாக போலீசார் தெரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments