51 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையிலிருந்து திருடப்பட்ட சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!

0 2292
51 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையிலிருந்து திருடப்பட்ட சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!

தஞ்சையிலிருந்து கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தரின் வெண்கல சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கும்பகோணம் அருகேயுள்ள தாண்டந்தோட்டம் நாதனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து கடந்த 1971-ம் ஆண்டு திருடப்பட்ட சிலை குறித்து, கடந்த 2019-ம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிலையின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து தேடிய போலீசார், நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் சிலை இருப்பதை கண்டறிந்தனர்.

யுனெஸ்கோ ஒப்பந்தப்படி சிலையை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments