தேயிலை தோட்டத்தில் 4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது..!

0 2784
தேயிலை தோட்டத்தில் 4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது..!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே, 4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய நிலையில், பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.

அரக்காடு பகுதியில், கடந்த 10-ம் தேதி, தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளியின் 4 வயது மகள், சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த நிலையில், சிறுத்தையை கண்காணிக்க 15 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், அதனை பிடிக்க இரு இடங்களில் கூண்டு வைத்த நிலையில் இன்று காலை கூண்டில் சிறுத்தை சிக்கியது.

இதனைத் தொடர்ந்து, முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுத்தை அங்கு வனப்பகுதியில் ஒன்றில், பத்திரமாக விடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments