ரயில் தண்டவாளத்தில் சென்னை ஐ.ஐ.டி மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு..!

0 8128
ரயில் தண்டவாளத்தில் சென்னை ஐ.ஐ.டி மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்பு..!

ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் சென்னை ஐ.ஐ.டி மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி - இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் நேற்று வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பணியாளர்கள், இளம்பெண் ஒருவர் தலை, முகம் ஆகிய இடங்களில் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சடலத்தை மீட்ட போலீசார் விசாரித்ததில், அந்த பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மேகாஸ்ரீ என்பதும் டெல்லியில் எம்.டெக், பி.எச்.டி முடித்துவிட்டு ஐ.ஐ.டி விடுதியில் தங்கி 3 மாத ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது.

மாணவி எதற்காக இங்கு வந்தார்? ரயிலில் செல்லும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments