உத்தரகாண்டில் மேகவெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழையால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ரயில்வே மேம்பாலம்..!

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேகவெடிப்பை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீண்டும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, குலு, சம்பா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சம்பா மாவட்டத்தில் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காங்க்ரா மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தன.
இதனிடையே, தொடர் மழையால் மண்டி, குலு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூனில் பெய்து வரும் தொடர் மழையால் தப்கேஷ்வர் மகாதேவ் கோயில் அருகே தமாசா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Comments