மத்திய பிரதேசத்தில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 9 வயது சிறுமி கவலைக்கிடம்..!

0 3025
மத்திய பிரதேசத்தில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 9 வயது சிறுமி கவலைக்கிடம்..!

மத்திய பிரதேசத்தின் போபாலில் 9 வயது சிறுமி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஜஹாங்கிராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜாபர் முகமுதுவின் 9 வயது மகள், இரண்டாவது மாடியில் விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கை நழுவி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

தரைத்தளத்தில் விழுந்த சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments