நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி

0 2044

தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் மதுரா, துவாரகா, அயோத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாட்டின் முக்கிய கோவில்களில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாட்டத்தில் பெரும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். இஸ்கான் சார்பில் சென்னை மற்றும் கோயமுத்தூரில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது

பெங்களூர், ஹைதராபாத்,மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி வண்ண விளக்குகள், ஆராதனைகள் பஜனைகளுடன் கொண்டாடப்பட்டது 

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தயில் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தோரில் மனித பிரமிடு வடிவில் வீரர்கள் உறியடி நிகழ்ச்சியை நடத்தினர். இதனை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்

இதே போல் குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா, மதுரா உள்ளிட்ட இடங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா களை கட்டியது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments