என் பொண்ணு சிவனேன்னுதாண்டா இருக்கா அவள போயி..! காங்கிரஸில் திரிசா.. தினுசா பரவிய தகவல்..!

0 10944
என் பொண்ணு சிவனேன்னுதாண்டா இருக்கா அவள போயி..! காங்கிரஸில் திரிசா.. தினுசா பரவிய தகவல்..!

நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பொய்யானது என்று திரிஷாவின் தாய் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக இருந்த திரிஷா, நடிகர்களுக்கு இணையாக ரசிகர் மன்றம் வைத்து திரையரங்குகளில் பரபரப்பை ஏற்படுத்தினார். பொன்னியன் செல்வன் படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள திரிஷா காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதிக்க போகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது

இதையடுத்து திரிஷாவின் தாய் உமாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு திரிஷா , காங்கிரஸில் இணைந்து அரசியலுக்கு வருகிறாரா என்று கேட்ட போது பதறியபடியே அப்படி ஒரு திட்டம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments