மும்பையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விபத்து.. முன்கூட்டியே குடியிருப்புவாசிகள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு..!

0 2291
மும்பையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விபத்து.. முன்கூட்டியே குடியிருப்புவாசிகள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விபத்துக்குள்ளனது.

போரிவாலி பகுதியில் உள்ள அக்கட்டிடம், பழைய மற்றும் சேதமான கட்டிடமாக அரசால் அறிவிக்கப்பட்டு, அதில் குடியிருந்தவர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், பிற்பகலில் திடீரென அக்கட்டிடம் சரிந்து விழுந்தது.

குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments