நாடு முழுவதும் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி!

0 3639

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நன்னாளில் கண்ணனின் உன்னத லீலைகளில் சிலவற்றை காண்போம்.

கண்ணன் பிறந்ததைக் குறிக்கும் ஜன்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில் நள்ளிரவில் கண்ணன் அவதரித்ததாக கூறப்படுகிறது. இரவில் பிறந்ததால் கருமை நிறத்தில் பிறந்ததாக கண்ணன் பற்றி கூறப்படுவதுண்டு.

தேவகியின் வயிற்றில் குழந்தையாக சிறையில் பிறந்து தயிரும் வெண்ணையும் திருடித் தின்று குறும்புகள் புரியும் பாலகனாக யசோதையிடம் வளர்ந்தான் கண்ணன்.

இதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் ஆண் குழந்தை பிறந்தால் கண்ணா என்றும் பெண் குழந்தை பிறந்தால் கண்ணம்மா என்றும் அழைத்து மகிழ்கிறார்கள்.

வளர்ந்த பருவத்தில் ராதையை காதலித்து காதலின் மகத்துவத்தை தனது ராசலீலைகள் மூலம் உணர்த்தியவன் கண்ணன்.

கடும் துன்பத்தை அனுபவித்த ராமனின் அவதாரம் போல் அல்லாமல் குதூகலமும் துள்ளலும் நிறைந்தது கண்ணனின் திரு அவதாரம். மீராவும் ஆண்டாளும் கண்ணனுக்காக உருகியவர்கள். இதனால் காதல் தெய்வமாக கண்ணன் காட்சியளிக்கிறான்.

குழந்தையாகவும் காதலனாகவும் கீதை உரைத்த கண்ணன், ஞானியாகவும் காட்சியளித்தது பகவத் கீதையை உரைத்த போது...
மகாபாரத யுத்தக் களத்தில் குருசேத்திரத்தில் இரு அணிகளுக்கு மத்தியில் நின்று கீதையை உரைத்து உலகின் மந்திரம் அனைத்தையும் இயக்கும் மாயவிரலோன் தானே என்று உரைக்கிறான் கண்ணன். நம்ப மறுக்கும் அர்ஜூனனுக்கு தனது விஸ்வரூபத்தைத் தரிசிக்க வைக்கிறான்.

இத்திருநாளில் கண்ணனை வணங்கினால் கவலைகள் தீரும் மகிழ்ச்சி பிறக்கும். வாழ்க்கையை வழிநடத்தும் சாரதியாக அவன் துணை என்றும் இருக்கும் என்று கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments