சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில், அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிய இளைஞர்.!

0 3979

மதுரை திருமங்கலம் நகர் எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில், அலுவலகத்தை அடித்து நொறுக்கி தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சவுடார்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார், அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்துமாறு கூறியதால், வாகனத்தை அங்கே நிறுத்திவிட்டு அவர் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு காரை எடுக்க சென்றபோது, இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அரவிந்த் அங்கிருந்த சிசிடிவி அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments