சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆத்திரம்.. கட்டையால் சிசிடிவியை அடித்து நொறுக்கி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்..!

0 3230
சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆத்திரம்.. கட்டையால் சிசிடிவியை அடித்து நொறுக்கி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்..!

தாம்பரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 60 ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஆர்.சி புத்தங்கள் மாயமான விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர், ஆத்திரத்தில் அலுவலகத்தின் சிசிடிவி கேமராக்களை உடைத்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கடந்த 11ம் தேதி ஆர்.சி., புத்தகங்கள் காணாமல் போனதாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் நேரில் சென்று விசாரித்த போக்குவரத்து ஆணையர், ஆர்.டி.ஓ.,வின் உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர் பாலாஜி உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி நேற்று தனது நண்பர்களுடன் சென்று, தகவலை யார் வெளியிட்டது எனக்கூறி சக அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்ததோடு, அங்கிருந்த சிசிடிவியை உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments