ஜிம்பாம்வே நாட்டில் பரவும் தட்டம்மை நோய் - 156 குழந்தைகள் பலி..!

0 2202
ஜிம்பாம்வே நாட்டில் பரவும் தட்டம்மை நோய் - 156 குழந்தைகள் பலி..!

ஜிம்பாப்வே நாட்டில் பரவி வரும் தட்டம்மை நோய்க்கு 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் ஜிம்பாப்வேயில் பரவத் தொடங்கிய தட்டம்மை நோய், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

தட்டம்மையால் இதுவரை 2 ஆயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 157 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெரும்பாலான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும் மத நம்பிக்கைகள் காரணமாக பலர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மறுப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், 6 மாதம் முதல் 15 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய திட்டத்தை ஜிம்பாப்வே அரசு தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments