நேற்று அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றிய பட்டியலின ஊராட்சி தலைவர்..!

0 2924
நேற்று அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றிய பட்டியலின ஊராட்சி தலைவர்..!

பட்டியலினத்தவர் என்பதால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்ற அனுமதிக்காத ஊராட்சி மன்ற தலைவர் இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 172 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சுதந்திர தினத்தன்று தலைமை ஆசிரியர் மணி முத்து தலைமையில் கொடியேற்றப்பட்டது.

பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழரசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் வைரலாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், இன்று மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் மாணவர்கள் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments