ரூட் தல தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் கல்லூரி மாணவனுக்கு தலையில் வெட்டு- 3 பேர் கைது..!

0 3640
ரூட் தல தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் கல்லூரி மாணவனுக்கு தலையில் வெட்டு- 3 பேர் கைது..!

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவனை தலையில் கத்தியால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ரூட் தல தொடர்பாக வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

அதில், பச்சையப்பன் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் தினேஷ் தலையில் வெட்டு பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த திருவள்ளூர் ரயில்வே இரும்புபாதை போலீசார், மோதலில் தொடர்புடைய மாநிலக் கல்லூரி மாணவர்களுடன் ரயிலில் பயணிக்கும் நண்பர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments