கீழவாசல் அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின..!

0 2766
கீழவாசல் அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின..!

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.

கீழவாசல் நான்கு வழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கண்ணையன் டீ ஸ்டாலில், பலகாரம் சுடும் போது சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனதாக கூறப்படுகிறது. இதனை கடை மாஸ்டர் கவனிப்பதற்குள் தீப்பிடித்ததால் கடையில் இருந்த அனைவரும் வெளியேறினர்.

இதனையடுத்து, சிலிண்டர் வெடித்து சிதறியதில் கடை முழுக்க தீப்பற்றி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களும் தீப்பற்றி மளமளவென எரிந்தன. தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments