'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் காலமானார்

0 5914

இலக்கியவாதியும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு வயது 77. காங்கிரஸ் பேச்சாளரான இவர் காமராஜர், கண்ணதாசன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர்.

கோவில் திருவிழாக்களில் ஆன்மீகச் சொற்பொழிவு, பட்டிமன்றங்களில் நடுவர் எனப் புகழ்பெற்று விளங்கியவர்.

இவர் 1996 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்.

வயது மூப்பு, உடல்நலக் குறைவால் அவர் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments