தொழிலதிபரின் சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ஐ-பேட், பணத்தை திருடிய நபர்களுக்கு வலைவீச்சு

0 2932
தொழிலதிபரின் சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ஐ-பேட், பணத்தை திருடிய நபர்களுக்கு வலைவீச்சு

சென்னையில், தொழிலதிபரின் சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ஐ-பேட், பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் கண்களில் அணியப்படும் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் ஷாம்லி. டிஜிபி சைலேந்திர பாபுவின் உறவினரான இவர் தொழில் நிமித்தமாக கோயம்பேட்டில் உள்ள சங்கீதா உணவகத்தில் நண்பர்கள் இருவரை சந்தித்துள்ளார்.

பின் வெளியே வந்து பார்த்தபோது அவரது BMW காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ஐ-பேட் மற்றும் 12,500 ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. ஷாம்லி அளித்த புகாரின் பேரில், போலீசார் ஹோட்டலுக்கு வெளியே பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments