ரூ.1 லட்சம் செலுத்தினால் ஓராண்டில் ரூ.2 லட்சம் தருவதாக கூறி பணமோசடி.. போலீசார் விசாரணை..!

0 4629
ரூ.1 லட்சம் செலுத்தினால் ஓராண்டில் ரூ.2 லட்சம் தருவதாக கூறி பணமோசடி.. போலீசார் விசாரணை..!

சேலம் அருகே ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தினால் ஓராண்டில் 2 லட்சமாக திருப்பித் தருவதாக கூறி பண மோசடி செய்த நிறுவனரை, முதலீட்டாளர்கள் பிடித்து தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

சேலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்தி வரும் ஜஸ்ட்வின் ஐடி டெக்னாலஜி இந்தியா என்ற நிறுவனத்தின் அந்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிறுவனத்தின் வேலூர் கிளையில் மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்ட நிலையில், பாலசுப்பிரமணியன் 3 ஆண்டுகளாக தொகையை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த வேலூர் கிளை முதலீட்டாளர்கள், சேலம் வந்து பாலசுப்பிரமணியத்தை பிடித்து தாக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணியத்தின் அடியாட்களுக்கும் வேலூர் முதலீட்டாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அடியாட்கள், பாலசுப்பிரமணியத்தை ஆட்டோவில் அழைத்துச் சென்ற நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments