டாஸ்மாக் கடையின் பார் காசாளர் அரிவாளால் சரமாரி வெட்டிக் கொலை - உறவினர் கைது..!

0 9661
டாஸ்மாக் கடையின் பார் காசாளர் அரிவாளால் சரமாரி வெட்டிக் கொலை - உறவினர் கைது..!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே டாஸ்மாக் பாரில் கூலிப்படையினரை வைத்து காசாளரை கொன்ற வழக்கில் அவரது உறவினர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளிக்குப்பம் பாளையத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையின் பாரில் காளையப்பன் என்பவர் காசாளராக கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை காளையப்பன் பாரில் சமையலில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாருக்குள் நுழைந்து அவரை திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சம்பவத்தில் தொடர்புடைய காளையப்பனின் உறவினரான சிவகங்கையைச் சேர்ந்த ராஜகண்ணப்பனை கைது செய்தனர்.

விசாரணையில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments