கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவதை உறுதி செய்க - மத்திய அரசு

0 2096
கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவதை உறுதி செய்க - மத்திய அரசு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை விரைந்து செலுத்துமாறு மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா வலியுறுத்தியுள்ளார்.

தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள் கட்டமைப்பு இயக்கம், 15-வது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து மாநில-யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வழியாக பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தகுதியான பயனாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த பொது இடங்களில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments