வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்ததால் அடுத்தடுத்த வீடுகளில் தீ விபத்து..!

0 2844
வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்ததால் அடுத்தடுத்த வீடுகளில் தீ விபத்து..!

சென்னை வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்ததால், அடுத்தடுத்த வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

அழகிரி நகரில் உள்ள 3 மாடி கட்டிடத்தில், 2 மற்றும் 3வது தளங்களில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், முன்றாவது மாடியில் ஆட்கள் யாரும் இல்லாத சமயத்தில், திடீரென அதிக சத்தத்தோடு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், அவர்கள் வீட்டிற்குள் பார்த்தபோது இரு சமையல் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதும் அதனால் தீ விபத்து ஏற்பட்டதையும் கண்டறிந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments