அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ..? கைய முறுக்கி குத்துவேன்..! கணவனுக்கு கச்சேரி வைத்த பெண்..!

0 3557
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ..? கைய முறுக்கி குத்துவேன்..! கணவனுக்கு கச்சேரி வைத்த பெண்..!

தூத்துக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த இன்னிசை கச்சேரியில் இளைஞர்களுக்கு இணையாக ஆடிய முதியவரை , கும்மாங்குத்து கொடுத்து மனைவி இழுத்துச்சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை கச்சேரி வைக்கப்பட்டது. கச்சேரியில் ஒலித்த அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ... என்ற பாடலுக்கு ஏற்ப அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் சிறுவர்களும் ஒரு பகுதியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர் .

இதை பார்த்துக் கொண்டிருந்த முதியவர் இளைஞர்கள் ஆடுவதை பார்த்து நாடி நரம்பு எல்லாம் நடன வெறி இறங்க இளைஞர்களுக்கு இணையாக அங்கு சென்று குத்தாட்டம் போட ஆரம்பித்தார். இதை பார்த்து காண்டான, முதியவருடைய மனைவி ஆவேசமாக எழுந்து சென்று , கணவரின் கையை முறுக்கி முதுகில் ஒரு கும்மாங்குத்து விட்டு ஓரமா போய் உட்காரு என்று இழுத்து விட்டுச் சென்றார்

மனைவி கொடுத்த அதிர்ச்சி அட்டாக்கால் கையை தூக்க முடியாமல் ஓரமாக போய் நின்று கொண்டிருந்தார். அங்கு கூடியிருந்த மக்கள் கச்சேரியை மறந்து கலகலப்பாயினர். கசேரியில ஆடினானாம் கணவன்... கைய புடிச்சி நறுக்குன்னு முறுகினாலும் மனைவி என்று இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments