சுகாதாரம், கல்வியை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

சுகாதாரம், கல்வியை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
பொது சுகாதாரம், கல்வியை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் டெல்லி அரசின் முன்மாதிரியை பயன்படுத்தி உலகின் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசுப் பள்ளிகளை பெரியளவில் திறந்து ஆசிரியர்களுக்கு பயற்சியளிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
Comments