பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்..!

0 1944
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்..!

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற விரிவாக்கத்தில் புதிதாக 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் உள்பட 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 பேரும், காங்கிரஸ் சார்பில் இரண்டு பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி சார்பில் ஒருவரும், சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments