கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் இருதரப்பினரிடயே மோதல் - 144 தடை உத்தரவு அமல்!

0 3263

கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

வீர சவார்க்கர் பேனர் வைப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்ததில் ஒருவருக்கு கத்திக் குத்து காயம் ஏற்பட்டது.

இதற்கு பதிலடியாக திப்பு சுல்தானின் உருவ போஸ்டர்களை பாஜகவினர் கிழித்து எறிந்தனர். இருதரப்பினரிடையே மோதல் அதிகரித்ததையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments