75ஆவது சுதந்திர நாள் விழா.. நாடு முழுவதும் கொண்டாட்டம்

0 2101

75ஆவது சுதந்திர நாளையொட்டிப் பொது இடங்களிலும் கோவில்களிலும் தனியார் இடங்களிலும் தேசியக் கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக்கில் புகழ்பெற்ற மணிக்கூண்டின் உச்சியில் தேசியக் கொடி கட்டப்பட்டுள்ளது. அதன் முன் தேசியக் கொடியேந்திய இளைஞர்கள் வந்தே மாதரம் என முழக்கமிட்டனர். 

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மூவண்ணக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோவிலில் சுதந்திர நாளையொட்டிச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவலிங்கத்தின் மீது தேசியக் கொடி போர்த்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவர் மனைவி நீதா அம்பானி, பேரன் பிரித்வி அம்பானி ஆகியோருடன் சுதந்திர நாளைக் கொண்டாடினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments