நாட்டின் 75வது சுதந்திர தினம்.. தமிழகம் முழுவதும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்கள்!

0 2492

நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தேசியக்கொடியை ஏற்றினார். 

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றினார்.

நாட்டின் 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நாட்டின் 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஜானி டாம் வர்க்கீஸ் ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு , சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தேசியக்கொடி ஏற்றினார்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தேசிய கொடி ஏற்றினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தேசிய கொடி ஏற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments