நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவு விழா கோலாகலமாக கொண்டாட்டம்.!

0 3299

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள முக்கிய இடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டது.

தஞ்சையில் மாநகராட்சி கட்டிடம், நகரின் முக்கிய சாலைகள் உட்பட மாநகரம் முழுவதும் மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலித்தன. கடலூரில் உள்ள வீராணம் ஏரியின் முகப்பு பகுதி மூவர்ண கொடி வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

இதேபோல், ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர், அப்துல் கலாமின் தேசிய நினைவகமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலின் 125 அடி உயரமுள்ள ராஜகோபுரம் முழுதும் அலங்கார வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments