சாலையில் சென்றவர்களை வழிமறித்து தகராறு செய்த போதை சிறுவன்..!

0 7704

திருப்பத்தூரில் சாலையில் சென்றவர்களை வழிமறித்து தகராறு செய்த போதை சிறுவனை அப்பகுதியை சேர்ந்த சிலர் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர்.

கந்திலி பேருந்து நிலையம் அருகே வசிக்கும் 15 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மதுபோதையில் சுற்றிதிரிந்த சிறுவன், அங்குள்ள காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை வழிமறித்து தகராறு செய்தார்.

தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட போதை சிறுவனை அப்பகுதியை சேர்ந்த சிலர், ஒன்றுசேர்ந்து பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments