பேருந்துக்காக நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த இரண்டு கொள்ளையர்களை கைது செய்த போலீசார்.!

0 3108

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேருந்துக்காக நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 14ம் தேதி அப்பட்டுவிளை பகுதியில் 60 வயது மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பியோடிய சிசிடிவி காட்சி வெளியானது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தக்கலையில் வாகன சோதனையில் இருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இந்த இருவரும் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட இருவரிடம் இருந்து 13 சவரன் நகைகளும், மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments