மதுரை சரவணன் பாஜகவிலிருந்து நீக்கம்

0 17614

மதுரை நகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிக் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் சரவணனிடம் கட்சி தொடர்பாக எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதையடுத்து நேற்றிரவு அமைச்சரை சரவணன் சந்தித்த நிலையில் இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments