இங்கிலாந்தில் நாட்டில் நிலவும் கடும் வறட்சி எதிரொலி... பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கட்டுப்பாடு

0 2992

இங்கிலாந்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

3 முதல் 5 குடிநீர் பாட்டில்கள் மட்டும் வாங்கும்படி அந்த அங்காடிகள் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளன.

மேலும் அதிக வெப்பம் காரணமாக உருளைக் கிழங்கு, ஆப்பிள் போன்ற பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது.  வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்வதை தடை செய்தல்  உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments