காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்

0 3096

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடல் மதுரை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை விமான நிலையத்திற்கு காலை கொண்டுவரப்பட்ட உடலுக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் மரியாதை செலுத்தினர். டி.புதுப்பட்டியில் ராணுவ வீரர் உடலுக்கு மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

லட்சுமணனின் உடல் அவரது சொந்த இடத்தில், அவருக்கு பிடித்த கிரிக்கெட் மட்டையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments