மெக்சிகோவில் இரு கும்பல்களிடையே ஏற்பட்ட மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!

0 2472

மெக்சிகோவின் ஜுவாரஸ் (Juarez) நகரில் இரு கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை ஜுவாரஸில் உள்ள சிறையில் இரு கும்பல்களுக்கிடையே நடந்த மோதலில் 2 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

இதை தொடர்ந்து சிறைக்கு வெளியே அந்த 2 கும்பல்களைச் சேர்ந்தவர்களும் கடைகளை தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டதோடு, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், ரேடியோவில் பணிபுரியும் 4 ஊழியர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாகவும் இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments